'பி.எம். நரேந்திர மோடி' திரைப்படத்திற்கு தேர்தல் கமிஷன் தடை

பிரதமர் நரேந்திர மாேடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள, 'பி.எம்.நரேந்திர மாேடி' திரைப்படத்தை, தேர்தல் காலத்தில் திரையிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
 | 

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில், பிரதமர் நரேந்திர மாேடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம், 'பி.எம்.நரேந்திர மாேடி' !

மக்களவை தேர்தலுக்கு முன், இப்படத்தை, தமிழ், ஹிந்தி, தெலுங்கு என இந்திய மாெழிகள் பலவற்றிலும் திரையிட, படக்குழு திட்டமிட்டிருந்தது. அதன் படி, ஏப்., 5ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால், சில நடைமுறை சிக்கல் காரணமாக, இப்படம் வெளியாவதில் தாமதம் ஆனது. தேர்தல் நேரத்தில், இப்படம் வெளியானால், அது பா.ஜ.க.,வுக்கு சாதகமாக அமையும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

எனினும், இது குறித்து, தேர்தல் கமிஷன் மட்டுமே முடிவெடுக்க முடியும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்நிலையில், மக்களவை தேர்தல் முடியும் வரை, பி.எம்.நரேந்திர மாேடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. 

அரசியல் தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் படங்களை, தேர்தல் காலத்தில் வெளியிடக் கூடாது என விதி இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் சார்பில் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP