பாஜகவின் மத்திய தேர்தல் குழுக்கூட்டம் இன்று தொடக்கம் !

நாடாளு தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, மூன்று நாட்கள் நடைபெறவுள்ள பாரதிய ஜனதாவின் மத்தியதேர்தல் குழுவின் கூட்டம், இன்று தொடங்குகிறது.
 | 

பாரதிய ஜனதாவின் மத்திய தேர்தல் குழு கூட்டம், டெல்லியில், வரும், 16, 18, 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தக் குழுவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா, மற்றும், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுகான், தன்வார்சந்திர கெலாட், ராம் லால், ஷானவாஸ் ஹுசேன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.  இந்த மூன்று நாள் கூட்டத்துக்குப் பின்னரே பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP