300 இடங்களுக்கு மேல் பா.ஜ., வெற்றி பெறும்: அமித் ஷா நம்பிக்கை

இது, நாட்டின் பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முடிவெடுப்பதற்காக நடைபெறும் தேர்தல். இதில், மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்துள்ளனர். நிச்சயம், 300க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்று, நரேந்திர மாேடி மீண்டும் பிரதமர் ஆவார்’’ என பா.ஜ., தலைவர் அமித் ஷா பேசினார்.
 | 

300 இடங்களுக்கு மேல் பா.ஜ., வெற்றி பெறும்: அமித் ஷா நம்பிக்கை

மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு, நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில், அதன் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மாேடி ஆகியோர், பத்திரிக்கையாளர்களை சந்தித்து, கட்சியின் செயல்பாடு மற்றும் தேர்தல் நிலவரம் குறித்து விளக்கம் அளித்தனர். 

பத்திரிக்கையாளர்களிடம் பா.ஜ., தலைவர் அமித் ஷா பேசியதாவது: ‛‛சுதந்திர இந்தியாவில், இதுவரை இல்லாத வகையில், மிக பிரமாண்ட முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் ஒரு கட்ட வாக்குப்பதிவு மீதமுள்ள நிலையில், நடந்து முடிந்த வாக்குப்பதிவுகளில், மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்துள்ளனர். 

இந்த தேர்தலில், 2014ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதை விட, பா.ஜ., கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். இது, நாட்டின் பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முடிவெடுப்பதற்காக நடைபெறும் தேர்தல். இதில், மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்துள்ளனர். நிச்சயம், 300க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்று, நரேந்திர மாேடி மீண்டும் பிரதமர் ஆவார்’’ என அவர் பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP