கூகுள் அரசியல் விளம்பரங்களில் பாஜக முதலிடம்- காங்கிரசுக்கு ஆறாவது இடம்

கூகுள் நிறுவனத்தில் அரசியல் விளம்பரங்கள் செய்வதில் பாஜக கட்சி முதலிடம் பிடித்துள்ளது. இதில் காங்கிரஸ் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 | 

கூகுள் அரசியல் விளம்பரங்களில் பாஜக முதலிடம்- காங்கிரசுக்கு ஆறாவது இடம்

கூகுள் நிறுவனத்தில் அரசியல் விளம்பரங்கள் செய்வதில் பாஜக கட்சி முதலிடம் பிடித்துள்ளது. இதில் காங்கிரஸ் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பல்வேறு நிதி நிறுவனங்களும், தொழில்நுட்ப அமைப்புகளும், தங்கள் வருமானத்தை அதிகப்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் கூகுள் நிறுவனத்துடன்  இணைந்து செயல்படுகின்றனர். அந்த வகையில் தேர்தலையொட்டி பல்வேறு முக்கிய தேசிய கட்சிகளும் விளம்பரத்திற்காக செலவிடுகின்றன. இதில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, பாஜக விளம்பரத்திற்கென 32 சதவீதம் பங்கு வைத்துள்ளது.

இதற்கு நேர்மாறாக காங்கிரஸ் வெறும் 0.14 சதவீதம் மட்டுமே விளம்பரத்திற்கென செலவிடுவதாக தெரிய வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், மொத்தம் 3.76 கோடி ரூபாய் அளவில் விளம்பரத்திற்கென செலவிடப்பட்டுள்ளது. இதில் மத்தியில் ஆளும் பாஜக 1.21 கோடி ரூபாய் செலவிட்டு முதலிடத்தை பெற்றுள்ளது. 

பாஜகவை தொடர்ந்து, ஆந்திராவின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி 1.04 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் 2வது இடத்தை பிடித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ஒரு  நிறுவனம் 85.25 லட்சம் ரூபாய் செலவிட்டு, 3வது இடத்தை பெற்றுள்ளது.  

மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கான விளம்பரத்திற்கு வேறொரு நிறுவனம் 63.43 லட்சம் ரூபாய்  செலவிட்டு 4வது இடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் ரூ.54,100 மட்டுமே செலவிட்டு, ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP