மஹாராஷ்டிராவில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் பா.ஜ., - சிவசேனா கூட்டணி

நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மஹாராஷ்டிராவில், மாநிலத்தில் ஆளும் பா.ஜ., - சிவசேனா கூட்டணி, மக்களவை தேர்தலிலும், அதிக இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
 | 

மாெத்தம், 48 மக்களவை தொகுதிகளை உடைய மஹாராஷ்டிராவில், பாரதிய ஜனதா கட்சி, 23 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா, 12 இடங்களிலும் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. 

அதே போல், மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய, காங்கிரஸ் கட்சிக்கு, 7 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு, 6 இடங்களிலும் வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 

கிட்டத்தட்ட இந்த ஒரு மாநிலத்தில் இருந்து மட்டுமே, 35 இடங்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்துவிடும் என்பதால், இந்த மாநிலத்தின் வெற்றி, தே.ஜ., கூட்டணி மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பதில் மிகப் பெரிய பங்காற்றவுள்ளது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP