தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்கள் 10 கோடி பேரிடம் கருத்து கேட்கும் பாஜக!

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை உருவாக்க, நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடம், கருத்து கேட்கும் பிரச்சாரத்தை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா துவக்கி வைத்தார்.
 | 

தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்கள் 10 கோடி பேரிடம் கருத்து கேட்கும் பாஜக!

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை உருவாக்க, நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடம், கருத்து கேட்கும் பிரச்சாரத்தை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா துவக்கி வைத்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், இன்று கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொதுமக்களிடம் கருத்து கேட்பு பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்.

இதன்படி, நாட்டிலுள்ள மக்கள் 10 கோடி பேரிடம் 'புதிய இந்தியா' எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கருத்து கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார் அமித் ஷா. இந்த பிரச்சாரத்திற்கு பிறகு கட்சியின் தேர்தல் அறிக்கை முழுமையடையும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் சரித்திரத்தில் முதல்முறையாக நடைபெறும் ஒரு நிகழ்வு இது என, அமித் ஷா பெருமிதம் கொண்டார்.

நாட்டின் பல்வேறு மூலைகளில் உள்ள பொதுமக்கள் 10 கோடி பேரிடம் கருத்து கேட்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாகவும், அவர்கள் 300 எல்.ஈ.டி வேன்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களிடம் கருத்து கேட்பார்கள், என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP