நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது - என்ன விவாதம்?

நாடாளுமன்ற நூலக அரங்கில், பா.ஜ.க. எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
 | 

அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க. அரசில் நடைபெறும் முழுமையான கூட்டத்தொடராக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முத்தலாக் தடை சட்ட மசோதா, மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

இதற்கிடையே, ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், பா.ஜ.க. எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பா.ஜ.க.வின் உயர்நிலைக் குழு கூட்டம் அமித் ஷா தலைமையில், அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது. அதில், 5 மாநில தேர்தல் தோல்வி குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP