ராகுல் காந்திக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்துள்ளது. அந்த மனு மீது வரும் திங்கள்கிழமை விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 | 

ராகுல் காந்திக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் மீனாட்சி லேஹி சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீது வரும் திங்கள்கிழமை விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமரை உச்சநீதிமன்றம் திருடர் என்று கூறியிருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்து வந்தார் என்று பாஜக கூறியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடாத ஒன்றை பேசியிருப்பதன் மூலம், நீதிமன்றத்தை அவர் அவமதித்துவிட்டார் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP