பாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்

இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும், தேச மக்களுக்கும் இடையே நிகழ்ந்த அற்புதமான வேதியியல் மாற்றத்தில், அனைத்து வாக்கு வங்கி அரசியல் கணக்குகளும் தவிடுபொடி ஆகிவிட்டன என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
 | 

பாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்

இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும், தேசமக்களுக்கும் இடையே நிகழ்ந்த அற்புதமான வேதியியல் மாற்றத்தில், அனைத்து வாக்கு வங்கி அரசியல் கணக்குகளும் தவிடுபொடி ஆகிவிட்டன என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற அபார வெற்றியையடுத்து, தமது சொந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசிக்கு இன்று சென்றுள்ளார்.

அங்கு, பாஜக தொண்டர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர்  நரேந்திர மோடி பேசியது:

கட்சித் தொண்டர்களின் மகிழ்ச்சியையே எனது தாரக மந்திரமாக கொண்டுள்ளேன்.  என்னை பாஜக தொண்டனாக உணர்வதில் பெருமை கொள்கிறேன். கட்சியின் சித்தாந்தங்களை, கொள்கைகளை நாட்டு மக்களிடம் பரப்புவதில் கட்சித் தொண்டர்கள் வினைஊக்கிகளாக செயல்பட்டு வருகின்றனர். போற்றுதலுக்குரிய இப்பணியின் காரணமாகவே, மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், ஒட்டுமொத்த தேசமக்களுக்கும் இடையே அற்புதமான வேதியியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த அருமையான மாற்றத்தில், அனைத்து விதமான வாக்கு வங்கி அரசியல் கணக்குகளும் தவிடுபொடி ஆகிவிட்டன.

தங்களது கடின உழைப்பின்  மூலம் இந்த  இமாலய சாதனையை சாத்தியமாக்கிய தொண்டர்களின் காலடியில் தேர்தல் வெற்றியை சமர்ப்பிக்கிறேன். என்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தேர்தலின்போது அதன் முடிவு தெரியும்வரை,  ஒரு வேட்பாளர் ஓய்வாக இருப்பதென்பது மிகவும் அரிதான விஷயமாகும். ஆனால், அதிர்ஷ்டவசமாக உங்களை போன்ற அர்ப்பணிப்பு  உணர்வுடன் பணியாற்றும் தொண்டர்களையும், என் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ள வாரணாசி தொகுதி மக்களையும் பெற்றுள்ளதால், தேர்தல் நேரமாக இருந்தாலும், பிரச்சாரம் முடிந்தபின் ஓய்வுக்காக கேதார்நாத்  கோவிலுக்கு சென்றேன் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP