மாயாவதி மீது எதிராக பாரதிய ஜனதா புகார் !

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி மத ரீதியாக பிரசாரம் செய்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதாக கட்சி தேர்தல் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
 | 

உத்தரபிரதேச மாநிலம் தியோபந்தில் நேற்று (7ஆம் தேதி) நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உரையாற்றினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்கள் எவரும் வாக்களிக்கக்கூடாது என பேசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, மாயாவதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.  இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஜே.பி.எஸ்.ரத்தோர், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP