கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!

நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க மகளிரணித் தலைவருமான கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது திமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

தி.மு.கவின் முன்னாள் தலைவர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழி, ஸ்டாலினுக்கு பிறகு திமுகவில் முக்கியமான தலைவர். சிறுவயதில் இருந்தே இதழியல் மற்றும் இலக்கியத்துறையில் பணியாற்றிய அவர் முதல் முறையாக 2007ம் ஆண்டு மாநிலங்களை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இரண்டாவது முறையாகவும் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் உள்ளார். 

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!

திமுக மகளிரணித் தலைவியாக உள்ள இவர் கட்சியில் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்து பல்வேறு கட்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவரை கெரவப்படுத்தும் விதமாக லோக்மட் செய்தி நிறுவனத்தின் சார்பில் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற அவையில் அவரின் மகத்தான பணிக்காகவும், ஜனநாயக மதிப்பீடுகளுக்கு வலு சேர்த்ததற்காகவும் அவருக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் 13ம் தேதி டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசுத்தலைவர் இந்த விருதை வழங்குகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP