தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக அசாருதீன் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ,முன்னாள் எம்.பி.யுமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில காங்கிரஸின் செயல் தலைவராக இன்று நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமை அவருக்கு இந்த புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.
 | 

தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக அசாருதீன் நியமனம்

இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ,முன்னாள்  எம்.பி.யுமான முகமது அசாருதீன், தெலங்கானா  மாநில காங்கிரஸின் செயல் தலைவராக இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். 

கட்சியில் தமக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என அசாருதீன் வருத்தம் தெரிவித்து வந்த நிலையில், அவரை சமாதானப்படுத்தும் வகையில், காங்கிரஸ் தலைமை அவருக்கு இந்த புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.

மேலும், பி.எம்.வினோத் குமார், ஜாஃபர் ஜாவித் ஆகியோர் தெலங்கானா மாநில காங்கிரஸ் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP