ஆந்திரா - 0, தமிழகம்  - 0 : பாஜக குறித்த மம்தாவின் தேர்தல் கருத்துக் கணிப்பு இது!  

மக்களவைத் தேர்தலில் பாஜக நூற்றுக்கும் குறைவான இடங்களில்தான் வெற்றி பெறும் என, அமர்க்களமான ஒரு கணிப்பை வெளிப்படுத்தியுள்ள மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரம் மற்றும் தமிழகத்தில் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது எனவும் ஆருடம் கூறியுள்ளார்.
 | 

இதுதொடர்பாக அவர், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மேலும் கூறியதாவது:
தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக 300 -க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் 2014 தேர்தலில், நாடு முழுவதும் பாஜக வென்ற மொத்த இடங்களில், 200 இடங்களை இத்தேர்தலில் அக்கட்சி இழக்கும்.

மொத்தமாகவே நூற்றுக்கும் குறைவான இடங்களில் தான் பாஜக வெற்றி பெறும். அதிலும், ஆந்திரம் மற்றும் தமிழகத்தில் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. மகாராஷ்டிரத்தில் 20 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழக்கும் என, மாநிலவாரியாக பாஜகவின் தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி தமது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பங்கேற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் உச்சமாக, கொல்கத்தா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இந்த வன்முறைக்கு இரு கட்சிகளும் ஒன்றையொன்று மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

"திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் தான் இந்த பாவச் செயலை செய்துள்ளனர்" என பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
"ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை திரிணாமூல் காங்கிரஸ்காரர்கள் தான் உடைத்தார்கள் என்பதை மோடி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அவரை சிறையில் தள்ள வேண்டி வரும்" என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP