விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட அகிலேஷ் யாதவ்!

முன்னாள் உத்தரபிரதேச முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல முயன்ற போது, விமான நிலையத்திலேயே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
 | 

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. அலகாபாத் செல்வதற்காக, தனி விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த அகிலேஷ் யாதவை லக்னோ விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விமானத்தின் படிக்கட்டில் ஏற இருந்த யாதவை, வழிமறித்து திருப்பி அனுப்ப அதிகாரிகள் முயன்றனர். பாதுகாப்பு கருதி அலஹாபாத் பல்கலைக்கழகத்திற்குள் அவரை அனுமதிக்க முடியாது, என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இரண்டு மணி நேரங்கள் காத்திருந்த பிறகு அகிலேஷ் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தோற்றுவிடும் என்ற பயத்தினால் இதுபோன்ற செயல்களில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருவதாக அகிலேஷ் குற்றம்சாட்டினார். கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, இந்த சம்பவத்தை தொடர்ந்து பாரதிய ஜனதாவுக்கு கடும் கண்டனம் விடுத்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கான அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் மாநிலத்திற்கு வந்து பாரதிய ஜனதாவுக்கு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP