சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்- அகிலேஷ் யாதவ் பேட்டி

பகுஜன் சமாஜ் எங்களுடன் கூட்டணியை முறித்து கொண்டால் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
 | 

உத்தரப்பிரதேசத்தில் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

இதில் இந்த கூட்டணி படுதோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாயாவதி வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் எங்களுடன் கூட்டணியை முறித்து கொண்டால் வருகிற சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகளுக்கும் எங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார். மேலும் கூட்டணி முறிந்தாலும் எங்கள் நோக்கம் ஒன்றே என்று அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP