உத்தரப்பிரதேசம்- ஆசம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவ் வேட்பு மனு தாக்கல்

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று உத்தர பிரதேசத்தின் ஆசம்கர் மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 | 

உத்தரப்பிரதேசம்- ஆசம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவ் வேட்பு மனு தாக்கல்

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கர் மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ஆசம்கர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். 

இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆசம்கர் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP