பாஜக கிட்ட கத்துக்கணும்...காங்கிரஸுக்கு குட்டு வைத்த அகிலேஷ்!

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து பாஜகவிடம் பாடம் கற்றுகொள்ள வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சிக்கு குட்டு வைத்துள்ளார்.
 | 

பாஜக கிட்ட கத்துக்கணும்...காங்கிரஸுக்கு குட்டு வைத்த அகிலேஷ்!

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து பாஜகவிடம் பாடம் கற்றுகொள்ள வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சிக்கு குட்டு வைத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்து,மக்களவைத் தேர்தலில் களம் காண காங்கிரஸ் விரும்பியது. 

ஆனால், 2014 மக்களவைத் தேர்தல், 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு காங்கிரஸ் மண்ணை கவ்வியதால், இந்த முறை அக்கட்சியை கூட்டணிக்குள் சேர்க்க விரும்பாமல், சமாஜ்வாதி -பகுஜன் சமாஜ் இரு கட்சிகள் மட்டும் தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

மாயாவதியும், அகிலேஷ் யாதவும் தம்மை கழற்றிவிட்ட ஆத்திரத்தில் அங்கு தேர்தலில் காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் தனியாகவே களமிறங்கும் என்று கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார். கூடவே, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா வதேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, தமது தலைமையில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் உள்ளதால், அங்கும் காங்கிரஸ் தனியாக நிற்க வேண்டிய சூழல். தலைநகர் டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, வலிய சென்று கூட்டணிக்கு அழைத்தாலும், அதனை காங்கிரஸ் பொருட்படுத்தவில்லை.

பாஜக கிட்ட கத்துக்கணும்...காங்கிரஸுக்கு குட்டு வைத்த அகிலேஷ்!

காங்கிரஸின் இந்த பிடிவாத போக்கால் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில், மக்களவைத் தேர்தலில் வாக்குகள் பிரிந்து, அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று சந்திரபாபு நாயுடுவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் எச்சரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் கூட்டணி குறித்து எம்டிடிவிக்கு இன்று அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாஜக இன்று தேசிய அளவில் பெரிய கட்சியாக இருந்தாலும், தேர்தல் கூட்டணி அமைப்பதில் மாநிலக் கட்சிகளை அனுசரித்தே செல்கின்றது. இதற்கு பிகாரில், ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக அமைத்துள்ள கூட்டணியை சிறந்த உதாரணமாக சொல்லலாம்.

அங்கு 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், தற்போது மொத்தமுள்ள இடங்களில் சரிபாதியை அக்கட்சிக்கு தருவதென முடிவெடுத்து, அங்கு பாஜக -ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உறுதியாகிவிட்டது.

இதேபோன்று, மகாராஷ்டிரத்தில் தங்களை தொடர்ந்து விமர்சித்து வரும் சிவசேனாவுடனும் பாஜக கூட்டணி அமைத்து அசத்தியுள்ளது.
கூட்டணி குழப்பங்கள், அதில் வரும் அழுத்தங்களை எப்படி கையாள்வது என்று பாஜகவுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.  ஜாதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில், எப்போது எந்தக் கூட்டணி கட்சித் தலைவர்களை முன்னிறுத்த வேண்டும் என்பதையும் அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.

காங்கிரஸும் பெரிய கட்சியாக இருப்பதால், அக்கட்சி தான் மாநிலங்களின் தேர்தல் கள நிலவரங்களை பொருத்து, கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பும் கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டும். ஆனால், அக்கட்சியின் செயல்பாடு முற்றிலும் மாறானதாக உள்ளது.
தேர்தல் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் பாஜகவிடம் காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP