விவசாயக் கடன் தள்ளுபடி, மதுவிலக்கு - சத்தீஸ்கரில் காங்கிரஸ் வாக்குறுதி

சத்தீஸ்கரில் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றும், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
 | 

விவசாயக் கடன் தள்ளுபடி, மதுவிலக்கு - சத்தீஸ்கரில் காங்கிரஸ் வாக்குறுதி

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், விவசாயக் கடன் தள்ளுபடி, மதுவிலக்கு போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

சத்தீஸ்கர் சட்டப்பேரவை 90 தொகுதிகளைக் கொண்டதாகும். இங்கு, வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க.வை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அந்த வகையில், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாள்களுக்குள்ளாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,500கவும், சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.1,700கவும் நிர்ணயம் செய்யப்படும், 60 வயதை தாண்டிய விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1 என்ற விலையில் மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்கப்படும், வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும், வேலையில்லாத இளைஞர்கள் 10 லட்சம் பேருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போதுள்ள 6 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை பல்நோக்கு மருத்துவமனைகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், பின்தங்கிய பகுதிகளான பஸ்டார், சர்குஜா, கரியாபந்த் உள்ளிட்ட இடங்களுக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றும், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்றும், மேலும் பல வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP