அகமதாபாத்தில் வாக்களித்தார் அத்வானி

பா.ஜ., மூத்த தலைலவர் அத்வானி, அகமதாபாத்தில் உள்ள, வாக்குச்சாவடியில் தன் வாக்கை பதிவு செய்தார்.
 | 

அகமதாபாத்தில் வாக்களித்தார் அத்வானி

பா.ஜ., மூத்த தலைலவர் அத்வானி, அகமதாபாத்தில் உள்ள, வாக்குச்சாவடியில் தன் வாக்கை பதிவு செய்தார். 

நாட்டின் 17வது மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவான இன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை, பிரதமர் நரேந்திர மாேடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் வாக்களித்த நிலையில், அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில், தன் வாக்கை பதிவு செய்தார். 

அந்த மாநிலத்தில் உள்ள, காந்தி நகர் தொகுதியில் பல முறை தொடர்ந்து வெற்றி பெற்ற அத்வானிக்கு, வயது மூப்பின் காரணமாக, இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதையடுத்து, அந்த தொகுதியில், கட்சித் தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார். 

இதற்கிடையே,  91 வயது நிறைவடைந்த நிலையிலும், வாக்குச் சாவடிக்கு வந்த, ஜனநாயக கடமையாற்றிய அத்வானியை, பல்வேறு தலைவர்களும் பாராட்டியுள்ளனர். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP