பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் விவேக் ஓபராய் குஜராத்தில் பிரசாரம்

அரசியல் கட்சிகள், தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது. அந்த வகையில் பாஜக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
 | 

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் விவேக் ஓபராய் குஜராத்தில் பிரசாரம்

அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
அந்த வகையில் பாஜக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் நடிகர் விவேக் ஓபராய், நடிகைகள் ஹேமமாலினி, ஸ்மிருதி இரானி ஆகியோரது பெயர் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அவர்கள் எந்தெந்த மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார்கள் என்ற தகவல்களும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஹேமமாலினி, ஸ்மிருதிஇராணி இருவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் உத்தரப்பிரதேசத்தில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளுக்கும் செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அது போல நடிகர் விவேக் ஓபராய் குஜராத் மாநிலத்தில் பிரசாரம் செய்வார் என்று தேர்தல் ஆணையத்திடம் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் 25 பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP