மகா கூட்டணியில் இணையத் தயாராகும் ஆம் ஆத்மி கட்சி!

பா.ஜ.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பிற கட்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, மகா கூட்டணியில் இணைய அக்கட்சி தயாராகி வருவதாக அறியப்படுகிறது.
 | 

மகா கூட்டணியில் இணையத் தயாராகும் ஆம் ஆத்மி கட்சி!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பிற கட்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைக்கவிருக்கும் மகா கூட்டணியில் இணைய அக்கட்சி தயாராகி வருவதாக அறியப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றத் தேர்தலின்போது டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா, சண்டீகர் ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவதற்காக முழு சக்தியையும் பயன்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. வரும் 2020-ஆம் ஆண்டு வரையிலும் கெஜ்ரிவால் தேசிய ஒருங்கிணைப்பாளராக நீடிப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மோடி-அமித் ஷா ஆகிய இருவரது சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர ஆம் ஆத்மி கட்சியின் பங்களிப்பு என்னவோ, அதை முன்னெடுப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். அதே சமயம் பிற கட்சிகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம்’’ என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு கோபால் ராய் பதில் அளித்தபோது, “வரும் நாட்களில் அரசியல் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்காணித்து, அதற்கேற்ப ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்யும்’’ என்று தெரிவித்தார்.


newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP