கேரளாவில் இடதுசாரி அணிக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதி கூறியுள்ளார். இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
 | 

கேரளாவில் இடதுசாரி அணிக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஆம் ஆத்மி மூத்த தலைவர் சோம்நாத் பாரதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலோத்பால் பாசு ஆகிய இருவரும் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

அப்போது சோம்நாத் பாரதி பேசுகையில், "கேரளாவில் இடதுசாரி அணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவது என்று எங்கள் கட்சியின் அரசியல் விவகாரக் குழு முடிவு செய்துள்ளது" என்றார்.

நிலோத்பால் பாசு கூறுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வீழ்த்தி, மதவாதம், வகுப்புவாதம் போன்றவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பல்வேறு மாநிலங்களில் இதற்கான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறோம். எங்களுக்கு ஆதரவளிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP