105 வயது தாயை சுமந்து சென்று வாக்களிக்கச் செய்த மகன்!

ஜார்க்கண்ட்டில், 105 வயதான தாயை, தோளில் சுமந்து வந்து வாக்களிக்ச் செய்த மகனுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 | 

105 வயது தாயை சுமந்து சென்று வாக்களிக்கச் செய்த மகன்!

ஜார்க்கண்ட்டில், 105 வயதான தாயை, தோளில் சுமந்து வந்து வாக்களிக்ச் செய்த மகனுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபூர் மக்களவை தொகுதியில், வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொகுதியை சேர்ந்த, 105 வயது மூதாட்டி, தான் கட்டாயம் வாக்களித்த தீர வேண்டும் தெரிவித்துள்ளார். 

105 வயது தாயை சுமந்து சென்று வாக்களிக்கச் செய்த மகன்!

தாயின் ஆசையை நிறைவேற்றவும், ஒவ்வொருவரும் கட்டாயம் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும், அவரது மகன், 105 வயது மூதாட்டியான தாயை, தோளில் சுமந்து சென்று, வாக்குச்சாவடிக்கு சென்றடைந்தார். 

அங்கு, தாய் வாக்களிக்கவும் உதவி செய்துள்ளார். இந்த வயதிலும் வாக்களித்தே தீர வேண்டும் என நினைத்து, தன் ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டிக்கும், அவர் வாக்களிக்க உதவிய அவரது மகனுக்கும், தேர்தல் அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP