தேர்தலில் வாக்களித்த 3 மாநில முதல்வர்கள்

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் இன்று வாக்களித்தனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் உள்ளிட்டோரும் இன்று வாக்களித்துள்ளனர்.
 | 

தேர்தலில் வாக்களித்த 3 மாநில முதல்வர்கள்

கேரளா, கர்நாடகா, குஜராத் உள்பட நாடெங்கிலும் 117 தொகுதிகளில் மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள முதல்வர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

ஒடிஸா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், புவனேசுவரத்தில் இன்று காலை வாக்களித்தார்.  கேரள முதல்வர் பினராயி விஜயன், கண்ணூரில் வாக்களித்தார்.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் மாநில முதல்வர் விஜய் ரூபானி, அவரது மனைவி அஞ்சலி ஆகியோர் வாக்களித்தனர். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இன்று வாக்களித்துள்ளனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP