3 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் அதிரடி!

காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இரண்டு பேர் உட்பட மூன்று எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வதாக, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
 | 

3 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் அதிரடி!

காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேரை தகுதி நீக்கம் செய்வதாக, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சுயேச்சை எம்எல்ஏ.,  சங்கரை தகுதிநீக்கம் செய்வதாக, ரமேஷ்குமார் இன்று அறிவித்துள்ளார்.

இதேபோன்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.,க்களான மகேஷ் குமட்டஹள்ளி, ரமேஷ் ஜார்கிஹோலி ஆகியோரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரமேஷ்குமார் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP