அதிருப்தியில் 20 எம்.எல்.ஏ.,க்கள்: எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம்?

ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்து வரும், 20 எம்.எல்.ஏ.,க்கள் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், மாநிலத்தில் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 | 

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்வராக உள்ளார். மிகக்குறைந்த எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள, ம.ஜ.த.,வுக்கு மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் ஆதரவளித்து வருகிறது. 

அதிக எம்.எல்.ஏ.,க்களை கொண்டு, தனிப் பெரும் கட்சியாக திகழும் பா.ஜ.,வுக்கு, ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை இல்லாததால், அந்த கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில், குமாரசாமி தலைமையிலான அரசு, நித்திய கண்டம், பூரண ஆயுசு என்கிற வகையில் தான் ஆட்சி செய்து வருகிறது. 

அதிருப்தியில் 20 எம்.எல்.ஏ.,க்கள்: எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம்?

அமைச்சரவையில் இடம் கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.,க்கள் மற்றும் ம.ஜ.த.,வினர், எந்த நேரத்திலும், பா.ஜ.,வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் நிலையில் உள்ளதால், அந்த மாநில அரசியலில் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுகிறது. 

இது குறித்து, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா கூறுகையில், ‛‛கர்நாடக மாநில அரசுக்கு எதிராக, ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 20 பேர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும், அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறாலாம். மாநிலத்தில் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளது. அதுவரை பொறுத்திருப்போம்’’ என, கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP