பெங்களூரில் 144 தடை உத்தரவு!

கர்நாடக முதல்வர் குமாரசாமி தன் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக வெளியாகி வரும் தகவல்களை அடுத்து, பெங்களூரு மாநகரம் முழுவம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 | 

பெங்களூரில் 144 தடை உத்தரவு!

கர்நாடக முதல்வர் குமாரசாமி தன் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக வெளியாகி வரும் தகவல்களை அடுத்து, பெங்களூரு மாநகரம் முழுவம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
அந்த மாநில சட்டசபையில், இன்று மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மஜத தலைவர் குமாரசாமி, வேறு வழியின்றி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அதற்கு தகுந்தார்போல், தான் முதல்வர் பதவி வகிக்க முழு ஆதரவு அளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தும், கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கோரியும், சட்டசபையில், முதல்வர் குமாரசாமி பேசி வருகிறார். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP