கொல்கத்தா சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக கொல்கத்தாவுக்கு இன்று மாலை வருகை தந்தார். அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
 | 

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக, கொல்கத்தா துறைமுக சபையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மிக மூத்த ஓய்வூதியதாரர்களான நாகினா பகத்(105 வயது)  மற்றும் நரேஷ் சந்திர சக்கரவர்த்தி (100 வயது) ஆகியோரை பிரதமர் கவுரவிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது, துறைமுக கீதத்தையும் பிரதமர் வெளியிட உள்ளார்.

150-வது ஆண்டு விழா நினைவாக பழைய துறைமுக படகுத் துறையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டு ஒன்றையும் மோடி திறந்து வைக்க உள்ளார்.இதற்கிடையே மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

www.newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP