மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் தான் முதல்வர் - நிதின் கட்கரி திட்டவட்டம்!!

மகாராஷ்டிரா அரசியலில், பாஜக-சிவசேனா கூட்டணி கட்சிகளிடையேயான ஆட்சி அமைப்பது குறித்த கருத்து வேறுபாடு இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் பாஜக தலைமையில் தான் ஆட்சி அமையும் என்றும் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதலமைச்சராக பதிவியேற்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சரான நிதின் கட்கரி.
 | 

மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியில் அமர்ந்து ஆட்சி அமைக்க போவது யார் என்பதில் வெற்றி கூட்டணியான பாரதிய ஜனதா-சிவசேனா கட்சியிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில், சிவசேனாவின் பிடிவாததிற்கு சற்றும் தலையசைக்கவில்லை பாஜக. இந்நிலையிலும், தனது பிடிவாததிலிருந்து சிறிதளவும் நிலை மாறாத சிவசேனா, பாஜகவிற்கு எதிரான பல கருத்துக்களை தொடர்ந்து முன் வைத்து வந்தது. 

இதனிடையில், நாளைக்குள் ஆட்சி அமைக்கப்படாவிட்டால், அம்மாநிலத்தில், ஜனாதிபதியின் ஆட்சி அமல்படுத்தப்படும் நிலையில், நாளை காலை 11 மணிக்குள் ஆட்சி அமைப்பது குறித்த முடிவை அம்மாநில ஆளுநரிடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளது பாஜக-சிவசேனா கூட்டணி.

இத்தகைய சூழலில், மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான நிதின் கட்கரி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை நாக்பூரில் வைத்து இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த நிதின் கட்கரி, மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி தான் அமையும் என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டதோடு, மோகன் பகவத்துடனான சந்திப்பிற்கும், அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெளிவு படுத்தியுள்ளார்.

இதை தொடர்ந்து, ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதிப்பதற்காக, இன்று காலை, அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை, முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான குழு சந்திக்க இருந்த நிலையில், சிவசேனாவின் சம்மதத்துடன் இந்த சந்திப்பை வைத்து கொள்ளலாம் என்ற ரீதியில், இதை ஒத்த வைத்துள்ளனர் பாஜக தரப்பினர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP