ஃபரூக் மற்றும் ஒமர் அப்துல்லாக்களை கட்சி உறுப்பினர்கள் சந்தித்து பேச அனுமதி

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் ஒமர் அப்துல்லா இருவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், அங்கே உள்ளாட்சித்தேர்தல் நடக்கவிருப்பதை தொடர்ந்து, இவர்கள் இருவரையும், இவர்களது கட்சி உறுப்பினர்கள் சந்தித்துப்பேச மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
 | 

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, பொது பாதுகாப்பிற்காகவும், சட்ட ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், பல தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்கும்படி மத்திய அரசு உத்திரவு பிறப்பித்திருந்தது. இதனடிப்படையில், 50 நாட்களுக்கும் மேலாக,  ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, சௌத்ரி லால் சிங், ராமன் பல்லா, ஃபிர்டஸ் தாக், சுர்ஜித் சிங் ஸ்லாத்தியா, அப்துல் மஜீத் வானி, ஹர்ஷ் தேவ் சிங் உட்பட பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், வரும் அக்டோபர் 24 ஆம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடக்கவிருப்பதால், ஜம்முவில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், காஷ்மீர் தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் ஒமர் அப்துல்லா இருவரையும், அவர்களது கட்சி உறுப்பினர்கள் சந்தித்து பேச மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

மேலும், காஷ்மீரின் தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு,  ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர் ஃபரூக் கான், "ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, பொது பாதுகாப்பிற்காக பல தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்கும் சூழல் உருவாகியது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், ஜம்முவை போல் காஷ்மீரின் தலைவர்களும், ஒவ்வோருவராக விடுவிக்கப்படுவார்கள்" என பதிலளித்துள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP