ஒடிசாவில் விமான சேவை ரத்து; விமான நிறுவனங்கள் உதவ வேண்டும்

ஃபானி புயல் காரணமாக மே 3-ஆம் தேதி ஒடிசாவின் புவனேஸ்வர் விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 | 

ஒடிசாவில் விமான சேவை ரத்து; விமான நிறுவனங்கள் உதவ வேண்டும்

ஃபானி புயல் காரணமாக மே 3-ஆம் தேதி ஒடிசாவின் புவனேஸ்வர் விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஃபானி புயல் முன்னெச்சரிக்கையாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், புயலின்போது தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு விமான நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சுரேஷ் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஃபானி புயல் நாளை ஒடிசா கடற்கரையைக் கடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP