பாகிஸ்தான் மேலும் பல துண்டுகளாக சிதற உள்ளதை யாரும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் எச

ஹரியானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "உங்களது எண்ணங்களை மாற்றவில்லையென்றால் மேலும் பல துண்டுகளாக சிதறிப் போவீர்கள்" என பாகிஸ்தானிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 | 

பாகிஸ்தான் மேலும் பல துண்டுகளாக சிதற உள்ளதை யாரும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை 

ஹரியானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "உங்களது எண்ணங்களை மாற்றவில்லையென்றால் மேலும் பல துண்டுகளாக சிதறிப் போவீர்கள்" என பாகிஸ்தானிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், வரும் அக்டோபர் 21 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு பெரும் கட்சிகளான, பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும், அம்மாநிலங்களில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

ஹரியானா மாநிலம் கர்னல் நகரில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கு அன்பான முறையில் ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாதிகளால், இந்தியாவின் பாலக்கோட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், இந்திய இராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானுக்கு எதிராக மறுதாக்குதலில் ஈடுபட்டது. இதை தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே ஓர் அதிருப்தியான சூழல் நிலவி வந்தது.

மேலும், மத்திய அரசு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி திரும்ப பெற்று, அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க உத்தரவு பிறப்பித்தது. இதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்ற எண்ணி, கடந்த செப் 27 ஆம் தேதி நடைபெற்ற, ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் இது குறித்து குரல் எழுப்பியது. ஆனால், ஐக்கிய நாடுகளில், சீனா,துருக்கி தவிர மற்ற நாடுகள் அனைத்தும், காஷ்மீர் பிரச்சனையை இந்தியாவுடன் சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ளுமாறு கூறி கைவிரித்து விட்டன. இதனால், ஏமாற்றமடைந்த பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி மேற்கொள்ளும் ஊடுறுவல்களை அதிகரித்தது.

இத்தகைய செயல்களுக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கு, கோபம் கலந்த அன்பான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் நம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

"பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு குழுவின் சந்தேகப்பட்டியலில் பாகிஸ்தான் ஏற்கனவே வைக்கப்பட்டு விட்டது. தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்து வருவது, முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவது என அனைத்து சர்வதேச முறைகேடான வழக்குகளிலும் பாகிஸ்தானின் பெயர் உள்ளது. பிரதமர் இம்ரான் கானிற்கு நான் ஒன்று கூற விரும்புகிறேன். நிஜமாகவே பயங்கரவாதத்தை ஒழிக்கும் எண்ணம் உங்கள் நாட்டிற்கு இருந்தால், அதற்கு உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களது ராணுவ வீரர்களை உங்களுக்கு உதவியாக அனுப்புகிறோம். 

ஐக்கிய நாடுகளின் பொது சபையில் உரையாடிய பாகிஸ்தான் பிரதமரின் முக்கிய பேச்சு ஜம்மு காஷ்மீரை பற்றியதாக மட்டும் தான் இருந்தது. அவருக்கு நான் மீண்டும் ஒருமுறை நினைவு படுத்த விரும்புகிறேன். காஷ்மீர் இந்தியாவின் ஓர் பகுதி. அதில் உரிமை கொண்டாட யாருக்கும் அனுமதி இல்லை. ஐக்கிய நாடுகளின் பொது சபை மட்டுமல்ல, எங்கு சென்று வேண்டுமானாலும் கோரிக்கை வையுங்கள். யாராலும் காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரிக்க முடியாது.

அன்று (1947) ,மதத்தின் அடிப்படையிலும், இரு நாடுகள் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலும், ஒன்றாக இருந்த நாட்டை, இந்தியா பாகிஸ்தான் என இரண்டாக பிரித்தீர்கள். பின்னர் (1971), ஒரே மதமாக இருந்தும் இரண்டாக பிரிந்தீர்கள். இன்று நான் உங்களுக்கு ஒர் அன்பான எச்சரிக்கை விடுக்கிறேன். இனியும் உங்களது சிந்தனைகளும், கோட்பாடுகளும், எண்ணங்களும் மாற்றப்படவில்லையெனில், இப்போது இரண்டாக உள்ள நீங்கள், இன்னும் பல பாகங்களாக சிதறிப்போவதை யாராலும் தடுக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP