அணைகட்ட தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டியதில்லை: கர்நாடகா

மேகதாதுவில் அணைகட்ட தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்று கர்நாடக தெரிவித்துள்ளது.
 | 

அணைகட்ட தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டியதில்லை: கர்நாடகா

மேகதாதுவில் அணைகட்ட தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்று கர்நாடக தெரிவித்துள்ளது.

மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. 

அந்த கடிதத்தில், ‘மேகதாதுவில் அணைகட்ட தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டியதில்லை;தமிழகத்திடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை. கர்நாடகத்திற்கான நீரை தேக்கி வைக்கவே மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீரை சேமித்து, வறட்சி காலத்தில் மற்ற மாநிலங்களுக்கு வழங்க உதவும். மேகதாதுவில் அணைகட்டும் 4,996 ஹெக்டேர் வனப்பகுதிக்குள் வருகிறது. அதனால், அணை கட்டினால் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் மேம்படும். அணை கட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. ஒரு மாநிலத்தில் நீரை தேக்க மற்றொரு மாநிலத்திடம் அனுமதி பெற தேவையில்லை. தமிழகத்திற்கு வழங்கப்படும் உபரி நீர் கடலில் கலந்து வீணாகிறது. உபரி நீரை தேக்கி வைக்க மேகதாது திட்டம் உதவும் என்பதால் அனுமதி வழங்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP