இறுதிக்கட்டத்தில் நிர்பயா வழக்கு.. 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற ஒத்திகை..

இறுதிக்கட்டத்தில் நிர்பயா வழக்கு.. 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றி ஒத்திகை..
 | 

இறுதிக்கட்டத்தில் நிர்பயா வழக்கு.. 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற ஒத்திகை..

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து சிங்கப்பூர் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் என்பவன் திகார் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டான். மற்றொருவன் சிறுவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டான். 

இறுதிக்கட்டத்தில் நிர்பயா வழக்கு.. 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற ஒத்திகை..

இந்நிலையில் முகேஷ் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் திகார் சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இறுதிக்கட்டத்தில் நிர்பயா வழக்கு.. 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற ஒத்திகை..

குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியில் மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லட் என்பவர் ஈடுபடவுள்ளார். இந்நிலையில், 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட திகார் சிறையில் ஒத்திகை நடைபெற்றது. 4 பேரின் எடையை அதிகாரிகள் பதிவு செய்து, அதே எடையில் பொம்மைகளை தயார் செய்திருந்தனர். கற்கள் மற்றும் கட்டிட கழிவுகள் நிரப்பப்பட்ட சாக்குகளை கொண்டு இந்த பொம்மைகள் தயாரிக்கப்பட்டன.

இறுதிக்கட்டத்தில் நிர்பயா வழக்கு.. 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற ஒத்திகை..

சிறை அதிகாரிகள் முன்னிலையில், அந்த பொம்மைகள் தூக்கில் போடப்பட்டு ஒத்திகை நடந்தது. 4 பேரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படுகிறார்கள். அவர்கள் நல்ல மனநிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, அவர்களிடம் சிறை அதிகாரிகள் தினமும் உரையாடி வருகிறார்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP