சிவசேனா கட்சி தலைவரின் சகோதரர் கொலை - பின்னணியில் யார்?

பண்டாரி பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் கமிஷன் முகவராக இருந்து வந்தவர் முகேஷ் நய்யார். இந்நிலையில் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் படாலாவில் அவரது சடலம் கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை சிலர் தாக்கி கொலை செய்திருப்பதை கண்டறிந்தனர்.
 | 

சிவசேனா கட்சி தலைவரின் சகோதரர் கொலை - பின்னணியில் யார்?

பஞ்சாப் மாநில சிவசேனா கட்சியின் துணைத்தலைவர் ரமேஷ் நய்யரின் சகோதரர் முகேஷ் நய்யர்  கொலை செய்யப்பட்டுள்ளார். 


பண்டாரி பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் கமிஷன் முகவராக இருந்து வந்தவர் முகேஷ் நய்யார். இந்நிலையில் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் படாலாவில் அவரது சடலம் கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை சிலர் தாக்கி கொலை செய்திருப்பதை கண்டறிந்தனர். அவரிடம் இருந்த பணப்பை கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததால், பணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். 


இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP