இந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் தோல்வி: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

இந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதா?, பல கட்சி ஜனநாயகத்தால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
 | 

இந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் தோல்வி: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

இந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதா?, பல கட்சி ஜனநாயகத்தால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதா என்று மக்களின் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. பல கட்சி ஜனநாயகத்தால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். பலகட்சி ஜனநாயகத்தால் இலக்கை அடைய முடியவில்லை. அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும் என நம்பி முன்னோர்கள் இதனை கொண்டு வந்தனர். பல கட்சி ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் பிரதமராக செயல்பட்டனர்’ என்றார்.

மேலும், ’30 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த கட்சிகள் 5 பெரிய முடிவுகளைக் கூட எடுத்ததில்லை. 5 ஆண்டுகள் ஆட்சி செய்த மோடி அரசு 50 பெரிய முடிவுகளை இதுவரை எடுத்துள்ளது. துல்லியத் தாக்குதல் போன்ற துணிச்சலான பல முடிவுகளை மோடி அரசு எடுத்து வருகிறது. 370 பிரிவை ரத்து செய்த நாள் முதல் இதுவரை காஷ்மீரில் ஒரு தோட்டா சத்தம் கூட கேட்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் நாள்தோறும் ஊழல், எல்லையில் பதற்றம் போன்ற செய்திகளே அதிகம் வந்துள்ளன.

காங்கிரஸ் அரசாங்கம் அரசியல் ரீதியாக முடக்கப்பட்டு எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் அமைச்சர்கள் பிரதமர் போல செயல்பட்டனர்; ஆனால் உண்மையான பிரதமருக்கு மதிப்பு கொடுக்கவில்லை’ என்று காங்கிரஸை கடுமையாக சாடி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  வாக்கு அரசியலுக்காக மோடி அரசு எந்த முடிவையும் எடுத்ததில்லை; மக்களின் நலனுக்காகவே முடிவெடுத்தது’ என்றும் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP