குடிமக்களுக்கான தேசிய பதிவில் விடுபட்ட மக்கள் ஓட்டுப் போடலாம் - தேர்தல் ஆணையம்

அசாம் மாநிலத்தில், குடிமக்களுக்கான தேசிய பதிவில் விடுபட்டிருக்கும் மக்கள், ஓட்டுப் போடுவதில் எந்த தடையும் விதிக்கப்படாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
 | 

குடிமக்களுக்கான தேசிய பதிவில் விடுபட்ட மக்கள் ஓட்டுப் போடலாம் - தேர்தல் ஆணையம்

அசாம் மாநிலத்தில், குடிமக்களுக்கான தேசிய பதிவில் விடுபட்டிருக்கும் மக்கள், தங்களது ஓட்டை பதிவு செய்வதில் எந்த தடையும் விதிக்கப்படாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அசாம் மாநிலத்தில், குடிமைப் பிறப்பு நிரூபனமாகாமல் இருக்கும் மக்கள் "டி வோட்டர்ஸ்" என்ற "சந்தேகிக்கப்படும் ஓட்டாளர்கள்" பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தேர்தலில் பங்கு கொள்ளவோ, தங்களது ஓட்டை பதிவு செய்யவோ முடியாது. தற்போது அசாம் மாநிலத்தில், குடிமக்களுக்கான தேசிய பதிவு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில், இந்த குடிமக்களுக்கான தேசிய பதிவில் பெயர் இடம் பெறாத மக்கள், "டி வோட்டர்ஸ்" வகை மக்களாக கருதப்படுவார்களா என்ற சந்தேகத்திற்கு பதிலளிக்கும் வகையில், தேர்தல் ஆணையம், அவர்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப்படலாம் எனக் கூறியுள்ளது.

மேலும், டி வோட்டர்ஸாக கருதப்படும் மக்கள், வெளிநாட்டினர் முறையிடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பு கூறுவதன் அடிப்படையிலேயே தேர்தலில் கலந்து கெள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

குடிமக்களுக்கான தேசிய பதிவு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 3.11 கோடி மக்கள் குடிமக்களாக நிரூபிக்கப்பட்ட நிலையில், 19 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP