மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆகிறார் மன்மோகன் சிங்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆகிறார் மன்மோகன் சிங்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் இதுவரை 5 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். மாநிலங்களவை எம்.பியாக கடந்த ஜூன் மாதம் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். 

தற்போது மாநிலங்களை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட, அவர் வருகிற 13ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். ஆகஸ்ட் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP