மகாராஷ்டிரா : ஆளுநருக்கு கேள்வியெழுப்பும் சிவசேனா!!!

மகாராஷ்டிரா மாநில ஆட்சி அமைப்பு குறித்த சிக்கலை தொடர்ந்து, நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஆளுநர் எதன் அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுத்தார் என்ற கேள்வி எழுப்பியுள்ளது சிவசேனா.
 | 

மகாராஷ்டிரா : ஆளுநருக்கு கேள்வியெழுப்பும் சிவசேனா!!!

மகாராஷ்டிரா மாநில ஆட்சி அமைப்பு குறித்த சிக்கலை தொடர்ந்து, நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஆளுநர் எதன் அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுத்தார் என்ற கேள்வி எழுப்பியுள்ளது சிவசேனா.

கடந்த சனிக்கிழமை காலையுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவரது ஆட்சி திரும்ப பெறப்பட்டு, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமல்படுத்தபட்டது. இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்திருந்தனர் சிவசேனா கூட்டணியான மஹா விகாஸ் அகாதி. இதற்கான விசாரணை கடந்த 3 நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 

இதனிடையில், 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக கூறி ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளது மஹா விகாஸ் அகாதி கூட்டணி. இந்நிலையில், சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில், ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று ஓர் கூட்டணி கட்சி கூறிக்கொண்டிருக்கும் நிலையில், ஒரே இரவில் மற்றொரு கட்சியை ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைக்க வேண்டிய காரணம் என்ன என்று கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

மேலும், தங்களுக்கு பகத் சிங் என்ற பெயரில் இருவரை தெரியும் என்றும், அதில் ஒருவர நாட்டுக்காக தூக்குமேடை வரை சென்றவர் என்றும், மற்றொருவர், ஜனநாயகத்தை தூக்குமேடைக்கு கொண்டு சென்றவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எம்.எல்.ஏக்களை கடத்தி வைத்து, மிரட்டி, ஆதரவு கோருவதை சாணக்கியத்தனம் என்றும், மகாராஷ்டிராவில் பாஜக செய்திருக்கும் வேலையை சாணக்கியத்தனம் என்று கூறுவது சரியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மற்றும் நேற்று வரை சரத் பவாருடன் இருந்துவிட்டு, ஒரே இரவில் பாஜகவிடம் சென்றுள்ள அஜித் பவார் பதவி வகிக்கு தகுதியற்றவர் என்றும் எழுதப்பட்டுள்ளது.

இறுதியாக, மகாராஷ்டிரா மக்கள் எதற்காகவும் கவலை கொள்ள வேண்டாம் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பை தொடர்ந்து ஆட்சி மாறப்போவது உறுதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவர்களின் மனுவினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், ரகசியமான முறையில் இல்லாமல் அனைவருக்கும் தெரியும் வகையில் தான் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP