மகாராஷ்டிரா : பாஜகவின் ஊழியராக பணியாற்றுகிறார் ஆளுநர் கோஷ்யாரி - சஞ்சய் ராவுத் குற்றச்சாட்டு!!

மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நேற்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சாராக பதவியேற்றதை தொடர்ந்து, அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பாஜகவின் ஊழியராக பணியாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளார் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்.
 | 

மகாராஷ்டிரா மாநிலத்தில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்கவிருந்த நிலையில், நேற்று காலை என்.சி.பி எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று பெரும்பாண்மையை நிரூபித்து, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தது. இதை தொடர்ந்து ஆளுநரின் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவரது ஆட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மூன்று கட்சிகளும் இணைந்து ஆளுநருக்கு எதிராகவும், தேவேந்திர ஃபட்னாவிஸிற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரி முழுக்க முழுக்க பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும், அவர் பாஜகவின் ஊழியராக பணியாற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் சிவசேனா கட்சி ஆலோசகர் சஞ்சய் ராவுத். சரத் பவார் என்னும் மிகபெரும் அரசியல் தலைவரை முதுகில் குத்தியுள்ளார் அவரது மகன் அஜித் பவார். இது நியாயமற்ற ஓர் பதவியேற்பு என்று கூறிய அவர், பாஜக மற்றும் என்.சி.பி அஜித் பவாரின் இத்தகைய செயல்களுக்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தற்போது பெரும்பாண்மையை நிரூபித்த ஆட்சி அமைக்க கூறினாலும் தங்களால் ஆட்சி அமைக்க முடியும் என்றும் தங்களுக்கு 165 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறியுள்ளார் சஞ்சய் ராவுத். மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மட்டுமல்லாது, அரசு துறைகளான, மத்திய விசாரணை பணியகம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்தையும் பாஜக அவர்களது கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பதாகவும், இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் சீர்கேடாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவுத்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP