மகாராஷ்டிரா அரசியல் விவகாரத்தால் களைகட்டும் ஹோட்டல் பிசினஸ்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு மாத காலமாக அரசியல் விவகாரங்கள் நீடித்து வருவதால், தங்களது எம்.எல்.ஏக்கள் பிற கட்சிகள் வசம் செல்லாமல் இருக்க கட்சி தலைவர்கள் அவர்களை ஹோட்டலில் தங்க வைப்பதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஹோட்டல் பிசினஸ் சூடுபிடித்துள்ளது.
 | 

மகாராஷ்டிரா அரசியல் விவகாரத்தால் களைகட்டும் ஹோட்டல் பிசினஸ்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு மாத காலமாக அரசியல் விவகாரங்கள் நீடித்து வருவதால், தங்களது எம்.எல்.ஏக்கள் பிற கட்சிகள் வசம் செல்லாமல் இருக்க கட்சி தலைவர்கள் அவர்களை ஹோட்டலில் தங்க வைப்பதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஹோட்டல் பிசினஸ் சூடுபிடித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணியிடையேயான மோதலை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரியது சிவசேனா. இந்நிலையில், சிவசேனாவுடன் ஆட்சி அமைப்பது குறித்து இருகட்சிகளும் ஆலோசனை மேற்கொண்டிருந்ததை தொடர்ந்து, சிவசேனா எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பை ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். தெளிவான கலந்துரையாடலுக்காகவும், ஒருமித்த தீர்மானத்திற்காகவும் தான் இத்தகைய செயல் மேற்கொள்ளப்பட்டது என்று சிவசேனா தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, சில நாட்களாக அந்த ஹோட்டல்களிலேயே தங்கி வந்தனர் அக்கட்சி எம்.எல்.ஏக்கள். இந்நிலையில், இரு தினங்கள் முன்பு அம்மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவாருடன் இணைந்து ஆட்சி அமைத்தது பாரதிய ஜனதா கட்சி. பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், என்.சி.பி தலைவர் சரத் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். 

இதனிடையில், ஏற்கனவே என்.சி.பி கட்சி எம்.எல்.ஏக்கள் 54 பேரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்ததாக பாஜக குறிப்பிட்ட நிலையில், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மீண்டும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கும் கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம் என்ற காரணங்களை முன் வைக்கின்றன அக்கட்சிகள். 

எனினும், இதற்கு காரணம் எங்கே உள்ள எம்.எல்.ஏக்களின் ஆதரவும் அவர்களை வெளியே விட்டால் போய்விடுமோ என்ற அக்கட்சிகளின் பயமாகவும் இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும், மகாராஷ்டிராவின் சமீப கால அரசியல் விவகாரங்களால் களை கட்டுகிறது ஹோட்டல் பிசினஸ் என்பதே உண்மை.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP