Logo

விவசாயிகள் தற்கொலையில் மகாராஷ்டிரா நம்பர் 1 - காரணம் மத்திய அரசு : மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், மன்மோகன் சிங் மற்றும் ரகுராம் ராஜன் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருந்ததை தொடர்ந்து, அதற்கு பதிலளித்த டாக்டர். மன்மோகன், பொருளாதார சரிவிற்கும், விவசாயிகள் தற்கொலைக்கும் மத்திய அரசு தான் காரணம் என்று கைக்காட்டியுள்ளார்.
 | 

விவசாயிகள் தற்கொலையில் மகாராஷ்டிரா நம்பர் 1 - காரணம் மத்திய அரசு : மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மன்மோகன் சிங் மற்றும் ரகுராம் ராஜன் மீது குற்றம் சாட்டியிருந்ததை தொடர்ந்து, அதற்கு பதிலளித்த டாக்டர். மன்மோகன், பொருளாதார சரிவிற்கும், விவசாயிகள் தற்கொலைக்கும் மத்திய அரசு தான் காரணம் என்று கைக்காட்டியுள்ளார்.

"ஓர் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய, அது எதனால் சரிவடைந்தது என்ற காரணத்தை தான் ஆராய வேண்டும். ஆனால் மத்திய அரசு, முந்தைய தலைவர்கள் மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், முதலீட்டாளர்களின் நம்பர் 1 முதலீடு செய்யும் இடமாக திகழ்ந்து வந்தது. ஆனால் இப்போது விவசாயிகளின் தற்கொலையில் நம்பர் 1 என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இதற்கு யார் காரணம்? இழைக்கப்பட்ட தவறுகளை சரி செய்யும் வழிகளை தான் பார்க்க வேண்டுமே தவிர,அவற்றை பிறர் மீது திணிப்பது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் குறித்த கேள்விகளுக்கு, "மத்திய அரசின் முடிவினை யாரும் தவறு என்று கூறவில்லை. அதை அவர்கள் அமல்படுத்திய விதத்தை தான் நாங்கள் சுட்டிக்காட்டினோம்" என்று பதிலளித்தார் முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP