மகாராஷ்டிரா : கட்சி உறுப்பினர்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் சந்திப்பு!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்தான தீர்மானங்கள் எடுக்கும் பொறுட்டு தனது கட்சி உறுப்பினர்களை இன்று சந்தித்து உரையாடவிருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்.
 | 

மகாராஷ்டிரா : கட்சி உறுப்பினர்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் சந்திப்பு!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்தான தீர்மானங்கள் எடுக்கும் பொறுட்டு தனது கட்சி உறுப்பினர்களை இன்று சந்தித்து உரையாடவிருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி வெளிடியிடப்பட்டது. இதை தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்றிருந்த கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா-சிவசேனா கட்சிக்களுக்கிடையே முதலமைச்சர் பதவியில் யார் அமர்வது என்பது குறித்த கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவி வந்தது. 

இதனிடையில், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று, அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இதை தொடர்ந்தும், அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த எந்த தீர்மானமும் வெற்றி கூட்டணிகளால் எடுக்கப்பட முடியாத நிலையில், வெற்றி கூட்டணிகள் மட்டுமல்லாது, தேர்தலில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளையும் பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி.

எனினும், குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்த கட்சியாலும் பெரும்பாண்மையை நிரூபிக்க முடியாத நிலை தொடர்ந்ததால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த செவ்வாய்கிழமையன்று அமல்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் வேலையில் ஈடுபட்டது. இந்நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மூன்றும் இணைந்து 40 திட்டங்கள் கொண்டுள்ள பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை வரையறுத்திருந்தனர். இவைகளை தொடர்ந்து, சிவசேனாவுடன் இணைவது குறித்த தனது கட்சி உறுப்பினர்களின் தீர்மானமும் முக்கியம் என்பதால் இன்று மாலை அவர்களை சந்திக்கவுள்ளார் சரத் பவார்.  

இது குறித்து என்சிபி கட்சி தலைவர் சரத் பவார் கூறுகையில், ஆட்சி அமைப்பது குறித்த தீர்மானம் தன்னுடையது மட்டுமல்ல என்பதால், இன்று மாலை தனது கட்சி உறுப்பினர்களை சந்தித்து உரையாடவிருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பு தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP