Logo

மகாராஷ்டிரா : அஜித் பவார் தொடர்பான நீர்ப்பாசன மோசடி வழக்குகள் மூடப்படவில்லை - மகாராஷ்டிரா ஊழல் தடுப்பு பணியகம் விளக்கம்!!!

மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் கடந்த சனிக்கிழமையன்று பதவியேற்றுள்ளதை தொடர்ந்து, அவர் மூது தொடரப்பட்டிருந்த நீர்ப்பாசன மோசடி வழக்குகள் மூடப்பட்டுவிட்டதாக வந்த சர்ச்சைகளை தொடர்ந்து, அவர் மீதுள்ள வழக்குகள் இன்னும் நிலுவையில் தான் உள்ளன என விளக்கமளித்துள்ளது மகாராஷ்டிரா மாநில ஊழல் தடுப்பு பணியகம்.
 | 

மகாராஷ்டிரா மாநில நீர்ப்பாசன மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று அம்மாநில துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதை தொடர்ந்து, இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த அனைத்து நீர்ப்பாசன மோசடி வழக்குகளும் மூடப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதை தொடர்ந்து, இதற்கு பதலளித்துள்ள மகாராஷ்டிரா மாநில ஊழல் தடுப்பு பணியகம், போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட, ரு. 70,000 கோடி ரூபாய் நீர்ப்பாசன மோசடி வழக்குகளில் 3000 வழக்குகள் தான் மூடப்பட்டிருக்கிறதே தவிர, அஜித் பவாரின் வழக்குகள் இன்னும் நிலுவையில் தான் உள்ளன என்று விளக்கியுள்ளது.

மேலும், இன்று மூடப்பட்டிருக்கும் 3000 வழக்குகளில் அஜித் பவார் தொடர்பான வழக்குகள் ஒன்றுக்கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளது அம்மாநில ஊழல் தடுப்பு பணியகம்.

தற்போதைய மகாராஷ்டிரா துணை முதலமைச்சரான அஜித் பவார், கடந்த 1999 முதல் 2014 வரையிலான காங்கிரஸ்-என்.சி.பியின் பல்வேறு காலங்களில், நீரிப்பாசனத் துறையின் பொறுப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP