மகாராஷ்டிரா : முக்கட்சிகளின் இணைப்பினால் கைவிடப்படுமா இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் ??

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் சம்மதம் தெரிவித்திருப்பதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட புல்லட் ரயில் திட்டம் கைவிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், குஜராத் மாநில அஹமதாபாத்திலிருந்து, மும்பை நகருக்கு புல்லட் ரயில் வசதி அமைப்பதற்கான ஒப்பந்தம் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இருவரிடையே கையெழுத்திடப்பட்டது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்காக, ஜப்பான் அரசு இந்தியாவிற்கு, மிக குறைந்த வட்டி விகிதமான 0.1 சதவீதத்துடன், 88,000 கோடி ரூபாய் நிதி வழங்கவுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில், சிவசேனாவுடன் இணைந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பிரதமர் மோடியின் இந்த புல்லட் ரயில் திட்டம் கைவிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

"மகாராஷ்டிராவில், இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்நேரத்தில், 1 லட்சம் கோடி ரூபாயை இந்த திட்டத்திற்காக மாநிலம் கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. விவசாயிகளின் நிலையையும், அம்மாநிலத்தின் இதர பிற விவகாரங்களையும் கருத்தில் கொண்டே இத்தகைய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது" என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், மாநில அரசின் கருத்தினை ஏற்காது இந்த திட்டத்தை தொடர்வதற்கு மத்திய அரசு விரும்புமாயின், பின்னர் மகாராஷ்டிராவின் வகையாக இந்த திட்டத்திற்கு எந்த தொகையும் வழங்கப்படாது என்றும், புல்லட் ரயில் திட்டத்திற்கு ஆகும் மொத்த செலவையும் மத்திய அரசு தான் ஏற்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP