Logo

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம்: இன்னும் இரண்டு நாட்களில் தீர்மானிக்கப்படும் - சிவசேனா!!

மகாராஷ்டிராவில், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் ஆட்சி அமைப்பது குறித்த விவகாரம் ஓர் தீர்மானத்திற்கு வரும் என்று கூறியுள்ளார் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவுத்.
 | 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த விவகாரத்தில் இதுவரை ஓர் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று காலை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு சந்திப்பின் முடிவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. 

கடந்த திங்கட்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினர். இதை தொடர்ந்து, தனது கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்த சோனியா காந்தி, கட்சியின் இன்றைய பணிக்குழு சந்திப்பை தொடர்ந்து, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், என்.சி.பி தலைவர் சரத் பவாரை, இன்று மாலை மீண்டும் ஒருமுறை சந்திக்கவிருப்பதாகவும், இதனை தொடர்ந்து நாளை சிவசேனாவுடனான கலந்துரையாடலுக்கு பிறகு ஓர் திட்டவட்டமான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத், என்.சி.பி தலைவர் சரத் பவாரை இன்று சந்திக்கவுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் வரும் வெள்ளியன்று மும்பையில் மேற்கொள்ளப்படும் சந்திப்பில் ஆட்சி அமைப்பது குறித்து முடிவாகும் என்றும், எப்படி பார்த்தாலும் இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து விவகாரங்களும் ஓர் முடிவுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP