மகாராஷ்டிரா : கார்கே, ஆண்டனி, அஹ்மத் படேல் மற்றும் சோனியா காந்தி சந்திப்பு!!

சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்தான ஓர் தீர்மானத்தை எட்டுவதற்காக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இருவரின் நேற்றைய சந்திப்பை தொடர்ந்து, இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான கார்ஜே, ஆண்டனி மற்றும் அஹ்மத் படேல் ஆகியோரும் சோனியா காந்தியை சந்தித்து உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
 | 

மகாராஷ்டிரா : கார்கே, ஆண்டனி, அஹ்மத் படேல் மற்றும் சோனியா காந்தி சந்திப்பு!!

சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்தான ஓர் தீர்மானத்தை எட்டுவதற்காக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இருவரின் நேற்றைய சந்திப்பை தொடர்ந்து, இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான கார்கே, ஆண்டனி மற்றும் அஹ்மத் படேல் ஆகியோரும் சோனியா காந்தியை சந்தித்து உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், நீடித்து வரும் ஆட்சி அமைப்பது குறித்தான சிக்கலை தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மூன்றும் கூட்டணியாக இணைந்து, ஆட்சி அமைப்பது குறித்தான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையில், அங்கு வெற்றியாளராக திகழந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி எதிர்கட்சி இருக்கையில் அமர தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதை தொடர்ந்து, கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் மூன்று கட்சிகளும் பொதுவான குறைந்தபட்ச திட்டங்களை வரையறுத்துள்ளது. இந்த திட்டப்பட்டியலின்படி, மூன்று கட்சிகளுக்கும் இடையான கருத்து வேறுபாடுகள் கலையப்பட்டு, ஒருமித்த திட்டங்கள் மட்டும் வரையறுத்திருப்பதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சிவசேனாவுடன் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிப்பதற்காக தனது கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார் தேசியவாத காங்கிரஸ் கட்தி தலைவர் சரத் பவார். இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின ்தலைவர் சோனியா காந்தியையும் நேற்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடல் மேற்கொண்டிருந்தார்.

இந்த இருகட்சி சந்திப்பினை தொடர்ந்து, இன்று காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தலைவர்களான கார்கே, ஆண்டனி மற்றும் அஹ்மத் படேல் ஆகிய மூவரும், தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் வைத்து சந்தித்து உரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, நாளை காங்கிரஸ் கட்சி தலைவர்களும், என்.சி.பி கட்சி தலைவர்களும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP