மகாராஷ்டிரா : பாஜக-என்.சி.பி கூட்டணி ஆட்சியை தொடர்ந்து, ட்விட்டரில் குவியும் தலைவர்களின் பதிவுகள்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், இன்று பாரதிய ஜனதா-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்ததிருப்பது அரசியல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், தலைவர்கள் பலரும் ட்விட்டர் என்ற ஆயுதத்தை கையில் எடுத்ததிருப்பதை தொடர்ந்து, பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
 | 

மகாராஷ்டிரா : பாஜக-என்.சி.பி கூட்டணி ஆட்சியை தொடர்ந்து, ட்விட்டரில் குவியும் தலைவர்களின் பதிவுகள்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், இன்று பாரதிய ஜனதா-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்ததிருப்பது அரசியல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், தலைவர்கள் பலரும் ட்விட்டர் என்ற ஆயுதத்தை கையில் எடுத்ததிருப்பதை தொடர்ந்து, பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று இரவு வரை சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மூன்றும் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த மும்மரமான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்து, இன்று ஆளுநரை சந்தித்து அவர்களின் தீர்மானத்தை தெரிவிக்கவிருந்தனர். இதனிடையில், இக்கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். 

நேற்று வரை முக்கட்சிகளின் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்ததை தொடர்ந்து, ட்விட்டரில் பதவி செய்திருந்த என்.சி.பி கட்சி தலைவர் நவாப் மாலிக், "புகழ்பெற்ற சாணக்கியர் (அமித் ஷா) என்று கூறப்படும் ஒருவரை சரத் பவார் தோற்கடித்து விட்டார்" என்று கூறியிருந்தார்.

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத், "எங்களை பார்த்து சிரித்தவர்களுக்கு பாடம் புகட்டி வரலாறு படைக்கும் நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பாஜகவின் இந்த அதிரடி முடிவை சற்றும் எதிர்பார்க்காத தலைவர்கள் ட்விட்டர் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். இது குறித்து கூறும் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்க்வி, "மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கும் இந்த திடீர் மாற்றம் கனவாக இருக்குமோ என்ற எண்ணம் தான் இப்போதும் உள்ளது. கூட்டணியாக ஆட்சி அமைப்பது குறித்து 2,3 நாட்கள் இல்லாமல், நீண்ட நாட்கள் ஆலோசனையில் ஈடுபட்டு விட்டது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள். இதில் பாஜக முந்தி கொண்டது" என்று பதிவு செய்துள்ளார்.

இதனிடையில், முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதிவியேற்றுள்ளதை தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர், சிவசேனாவின் சாணக்கியர் சஞ்சய் ராவுத்தின் பதிவிற்காக காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்

இவர்களை தொடர்ந்து, இன்னும் பல தலைவர்களின் பதிவுகளால் ட்விட்டரே நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. 

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP