மகாராஷ்டிரா : ஆட்சி அமைப்பு குறித்து இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு!!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருடனான, தாக்கரேக்களின் சந்திப்பை தொடர்ந்து, இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா தலைமையிலான ஆட்சி அமைப்பது குறித்து ஓர் தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு சம்மதம் தெரிவித்திருந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி கட்சியின் முக்கிய தலைவர்கள் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இந்த சந்திப்பின் முடிவாக இருகட்சிகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணப்பட்டதாக இருகட்சி தலைவர்களும் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே, மற்றும் சஞ்சய் ராவுத் மூவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான சரத் பவாரை நேற்று இரவு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான "மஹா விகாஸ் அகாதி" ஆட்சியை அமைப்பது குறித்து ஓர் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இன்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP