மகாராஷ்டிரா ஆட்சி அமைப்பு தீர்ப்பு : இந்திய அரசியலமைப்பின் 70 ஆண்டு கால நிறைவிற்கு கிடைத்த பரிசு - காங்கிரஸ் தலைவர்!!!

மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி அமைப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கான 70 ஆண்டு கால நிறைவிற்கு கிடைத்த பரிசு என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சி தலைவரான அபிஷேக் சிங்வி.
 | 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது மஹா விகாஸ் அகாதி கூட்டணி. இந்த வழக்கினை கடந்த 3 நாட்களாக விசாரித்து வருகிறது உச்ச நீதிமன்றம். இதை தொடர்ந்து, இந்த வழக்கிற்கான விசாரணைகள் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்ப நடத்தப்பட வேண்டும் என்றும், இன்று மாலைக்குள் சபா நாயகர் யார் என்பது தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், நாளை நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் அபிஷேக் மானு சிங்வி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 70 ஆண்டு கால நிறைவிற்கு கிடைத்துள்ள பரிசு உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு என்று கூறியுள்ளார். இவரை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான ப்ரித்விராஜ் சாவன், தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP